சிட்னி மேற்கு பகுதியில் குழந்தை பராமரிப்பு நிலையமொன்றுக்கு வெளியே காரொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த குழந்தையை நீண்ட நேரம் வாகனத்துக்குள் விட்டுச்சென்றுள்ளதால், கடும் வெப்பத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நேற்று மாலை மீட்கப்பட்ட குழந்தைக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சையளித்தாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழப்புக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவரவில்லை.
நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.