தெற்கு குயின்ஸ்லாந்தில் வார இறுதியில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலியாகியுள்ளனர்.
இதற்கமைய இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இக்காலப்பகுதியில் தெற்கு குயின்ஸ்லாந்தில் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.