மெல்பேர்ணில் இரு முஸ்லிம் பெண்கள்மீது தாக்குதல் நடத்திய பெண் விக்டோரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயது யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதியே 26 மற்றும் 30 வயதுகளுடைய இரு முஸ்லிம் பெண்கள் தாக்குதலுக்கு இலக்காகினர்.
ஹிஜாப் அணிந்திருந்ததால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர் எனவும், இது இஸ்லாமிய வெறுப்பு சம்பவம் எனவும் தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்ட பெண்ணை மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.