ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில், சீன படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்துவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
ஜி - 20 மாநாட்டில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின்போதே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.
சர்வதேச கடல் எல்லையில் பயணிக்கும் மூன்று சீன போர்க்கப்பல்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகு பார்வை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
சர்வதேச கடற்பரப்பிலேயே சீனா பயிற்சியில் ஈடுபடுவதால் அதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இது பற்றி சீன வெளிவிவகார அமைசருடன் ஆஸ்திரேலிய அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.