இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்வடுவது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பதில் பொலிஸ்மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டார்.
" பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. எனினும், தற்போது தற்போது அரசியல் ஆதரவு இல்லாமல்போயுள்ளது." எனவும் அவர் கூறினார்.
நாட்டில் 58 பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்த குழுக்களில் 1400 பேர்வரை உள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனனர்.
2024ஆம் ஆண்டுடில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் 5 என மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
https://www.youtube.com/watch?v=2oQTdOwsSPg