AustraliaCommunity

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்கிறதா ஆஸி?

காசாவில் அடுக்குமாடி குடியிருப்புகள்மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் பயன்படுத்தும் ஏவுகணைகளுக்குரிய சில முக்கிய பாகங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக கிறீன்ஸ் கட்சியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வணிக நிறுவனத்தால் மேற்படி தகவல் போலியானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ இஸ்ரேல் உட்பட பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளுக்குரிய பாகங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை.” – என்று ஆஸ்திரேலிய Varley குழுமம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button