AustraliaCommunityWorld

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா நடைமுறையில் புதிய கட்டுப்பாடு

சுற்றுலா விசா மற்றும் தற்காலிக பட்டாதாரிகள் விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கி இருப்பவர்கள் இனி மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது – என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் குடிவரவு விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை லேபர் அரசு அமுல்படுத்திவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே மேற்படி நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு விசிட்டர் விசாவில் வந்து, மாணவர் விசாவுக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.

2023 மே மாதம் முதல் 2024 இறுதிவரை இது தொடர்பில் 36 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த புதிய நடைமுறைமூலம் மாணவர் விசாவில் இருந்த பலவீனத்தை சீர்செய்யும் என்று குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button