AustraliaCommunity

மெல்பேர்ண் CBD பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை: பின்னணி என்ன?

மெல்பேர்ண் CBD பகுதியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் 33 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வந்ததாகக் கூறப்படும் காரை குண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனைக்குட்படுத்தினர். காருக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பயங்கரவாத செயலுடன் தொடர்புபட்டது அல்ல எனவும், சமூக பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள சில கட்டங்கள் மூடப்பட்டன. பணியாளர்கள் உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தன.

பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் குண்டுசெயலிழப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீதியொன்றும் மூடப்பட்டது. தேடுதல் வேட்டையின் பின்னர் வீதி திறக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

Related Articles

Back to top button