AustraliaCommunity

யூதர்களுக்கான சிறப்பு தூதுவர் நியமனத்தை வரவேற்கிறது லிபரல் கட்சி

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அது பெரும் அச்சுறுத்தல் என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையே தூதுவர் நியமனம் எடுத்துக்காட்டுகின்றது என்று லிபரல் கட்சியின் துணை தலைவர் Sussan Ley தெரிவித்தார்.

மத விரோத போக்குக்கு எதிரான சிறப்பு தூதுவர் ஒருவரை லேபர் அரசு நேற்று நியமித்தது.

யூத சட்டத்தரணியும், வணிகத் தலைவருமான Jillian Segal என்பவரையே பிரதமர், சிறப்பு தூதுவராக நியமித்துள்ளார்.. இந்நிலையில் குறித்த நியமனத்தை பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வரவேற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சமூக ஒற்றுமை மிக அவசியம் எனவும் Sussan Ley
வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, நியமனத்தை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்றுள்ளனர்.

Related Articles

Back to top button