ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையின் கீழ் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்த ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தோனேசிய வணிகக் குழு இந்த வாரம் சிட்னிக்கு வருகை தரவுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தோனேசிய முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இக்குழுவின் வருகை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.