ஆஸ்திரேலியாவிலுள்ள பொது பாடசாலைகளுக்கு மத்திய அரசு முழுமையாக நிதியளிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்தார்.
கூட்டாட்சி அரசின் பாதீடு முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார்.
'கல்வியானது வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கிறது, எனவே, அதனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்" எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பொதுப் பள்ளிகளுக்கு கூடுதலாக 16.5 பில்லியன் டாலர் காமன்வெல்த் நிதியுதவிக்கு இந்த நிதி பங்களிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
' இது ஒரு வெற்று காசோலை அல்ல நமது இளம் ஆஸ்திரேலியர்களுக்கான முதலீடு. இதைவிட மதிப்புமிக்க எதையும் நான் நினைக்கவில்லை." எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2025 கூட்டாட்சித் தேர்தல் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்பதையும் அல்பானீஸ் உறுதிப்படுத்தினார்.
சபா.தயாபரன்