ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த அரசின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 09, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று நாட்கள் விவாதத்துக்கு வழங்குமாறு கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு கூடவிருப்பதுடன் பிற்பகல் 4.30 மணி வரை விவாதம் நடைபெறும்.
அத்துடன், எதிர்வரும் 10 மற்றும் 12ஆம் திகதிகளி்ல் முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நாடாளுமன்றம்கூடவுள்ளது. இந்த விவாதம் சபை ஒத்திவைப்பு விவாதமாக இடம்பெறும் என்றும், விவாதம் நிறைவடையும்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.