others

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் தொழிலை மாற்ற தயாராகும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சுமார் 80 சதவீதமானோர், அடுத்த வருடம் முதல் தமது தொழிலை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர என தெரியவருகின்றது.

சம்பள அதிகரிப்பை கருதியும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்கும் நோக்கிலுமே அவர்கள் இவ்வாறானதொரு முடிவை எடுக்க தயாராகிவருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு 10 ஆஸ்திரேலியர்களில் சுமார் 8 பேர், தொழிலை மாற்றும் திட்டத்தில் உள்ளனர் என்பது கருத்து கணிப்புமூலம் தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு நிறுவனமொன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில், 77 சதவீத ஊழியர்கள், புதிய தொழிலை தேட ஆரம்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மேலதிகமாக , தொழிலில் ஊக்குவிப்பு இன்மை, மோசமான நிர்வாகம் ,நிர்வாக அடக்குமுறை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளும் புதிய தொழிலை தேடும் முயற்சிக்கு வழிவகுத்துள்ள காரணிகளாக அமைந்துள்ளன.

86 சதவீதமான தொழில் வழங்குநர்கள் சம்பள உயர்வை வழங்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும் அந்த தொகை ஊழியர்கள் எதிர்பார்க்கும் அளவில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button