Astrology

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (13.06.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெயரும் புகழும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நன்மை நடக்கக்கூடிய நாள் இது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சினைக்கு மேல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் எல்லா பிரச்சினையையும் சமாளிக்கும் தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பான். விடாமுயற்சியை கைவிடாதீர்கள். நிச்சயம் விஸ்வரூப வெற்றி கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன தடங்கல்கள் தடைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் தாண்டும் போது தான் வெற்றி வாகை சூட முடியும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மனநிறைவை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். வீட்டில் மூத்தவர்களின் பேச்சை கேட்கும் போது நன்மை நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசரப்பட்டு கோபப்பட்டு பேசக்கூடாது. பொறுமை அவசியம் தேவை.

கடகம் – கடக ராசிக்காரர்கள் இன்று அளவோடு ஆசைப்பட வேண்டும். எதிலும் பேராசை வேண்டாம். பேராசை பெருநஷ்டத்தை கொடுத்து விடும். அளவோடு சிந்தியுங்கள், அளவோடு வேலை செய்யுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும், குடும்பத் தலைவியின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் அந்த குடும்பம் சிறக்கும் பாத்துக்கோங்க.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்க போகின்றது. எதிலும் மன தைரியம் இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் இன்று கிடைக்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கும் வருமானம் உயரும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். முன்கூட்டியே உங்களுடைய வேலையை தொடங்கினால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். இன்று சோம்பேறித்தனத்தை கொஞ்சம் தள்ளி வைக்கவும். உங்களை ரொம்பவும் தாழ்த்தி பேசுபவர்களுடன் நட்புறவு வச்சிக்காதிங்க.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் சுப செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். கட்டுமான தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வரவு இருக்கும். உற்சாகத்தோடு வேலையை சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். கஷ்டங்கள் காணாமல் போகும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதிக்கும் திறன் படைத்தவர்களாக மாறுவீர்கள். கலைஞர்களுக்கும் இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாள் தான்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் சில மாற்றங்களை கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வது தவறு கிடையாது. பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள் அவ்வளவுதான். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கணும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கணும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த ஒரு வேலையும் சுறுசுறுப்பாக நடக்காது. ஒரு முறைக்கு பலமுறை முயற்சி செய்யும் பட்சத்தில் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய முதலீட்டை தவிர்க்கவும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதிங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான மனநிலை இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். செய்யும் வேலையிலும் கூடுதல் அக்கறை இருக்க வேண்டும். உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பிரச்சனைகளில் இழுத்து விட்டு விடுவார்கள். நண்பர்களிடமும் உறவுகளிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடன் இருப்பவர்கள் கூட பின்னால் குழி தோண்ட வாய்ப்பு இருக்கிறது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகும். தேவையற்ற செலவுகளை எப்படியாவது குறைக்கப் பாருங்கள். வாழ்க்கை துணை பேச்சைக் கேட்டு நடக்கவும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டை போட வேண்டாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Related Articles

Back to top button