சமூக ஊடக தளமான ‘வட்ஸ் அப்’ பாவனையாளர் குறித்த தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘வட்ஸ்-அப்’ நிறுவனத்தை 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் ‘வட்ஸ் அப்’பைப் பயன்படுத்தினர். பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டியுள்ளது என ‘பேஸ்புக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் ‘வட்ஸ் அப்’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.