தியாக தீபம் திலீபனுக்கு யாழ். நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின.
அதன் போது , நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டு , உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை , தியாக தீபம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.