ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 10 இலட்சம் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.