பொதுத்தேர்தல் முடிவடைந்து புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்லவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைப்பதற்கு முன்னரே ஜனாதிபதியின் டில்லி விஜயம் அமையவுள்ளது என தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் இன்னும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியா செல்லவுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.