மாவீரர் நாள் நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.