முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் வடக்கு இளைஞர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடியது.
இதன்போதே இவ்விகாரம் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கு சிறிதனர் எம்.பி. நடவடிக்கை எடுத்தார்.
இலங்கையில் இருந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில், ரஷ்யாவின் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்தவர்களின் பெயர் விபரங்களையும் சிறிதரன் எம்.பி. வெளியிட்டார்.
குறித்த இளைஞர்கள் அனுப்பிவைத்துள்ள படத்தையும் சபையில் காண்பித்தார். அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
இது பற்றி வெளிவிவகார அமைச்சரிடம் தெரியப்படுத்துங்கள். அது பற்றி கவனம் செலுத்தப்படும் என பதிலளித்தார்.