மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும்." - என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாம் இல்லாத பட்டங்களை எமது பெயர்களுக்கு முன்னால் சூடிக்கொள்ளவில்லை. மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தியதும் கிடையாது. எனவே, எமது கோப்புகளை திரட்டுவதற்கு முன்னர், தமது பக்கத்தில் உள்ளவர்கள் பற்றி ஜே.வி.பியினர் அறிந்து வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எது எப்படி இருந்தாலும் தனது கலாநிதி பட்டம் தொடர்பில் ஆவணங்களை முன்வைக்க கால அவகாசம் தேவையென முன்னாள் சபாநாயகர் கூறியுள்ளார். அதற்குரிய வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. எனினும், அவரின் அரசியல் பயணம் தொடரும்.
அறுகம்பே பிரச்சினை இருந்தது. பாதாள குழு பிரச்சினை உள்ளது. புலிகள் சின்னங்களுடன் 10 இடங்களில் நினைவேந்தல்கள் நடந்துள்ளன.
உரிய பாதுகாப்பு மீளாய்வின் பின்னர், மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கருதி பாதுகாப்பை இந்த அரசாங்கம் குறைத்திருக்கலாம் என நம்புகின்றேன். எனவே, ஏதேனும் நடந்தால் அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்." - என்றார்.