முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு மாத காலப்பகுதிக்குள் ரணில் டில்லி செல்லும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முதலாவது விஜயத்தின்போது இராஜதந்திர சந்திப்புகளில் அவர் ஈடுபடவில்லை, எனினும், இம்முறை முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடுவார் என தெரியவருகின்றது.
ஒரு வாரத்துக்கு மேல் இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, விசேட உரைகளையும் நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இந்தியா சென்றார். டிசம்பர் 17 ஆம் திகதிவரை டில்லியில் தங்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.