புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இவர், 51 ஆயிரத்து 391 வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
சபாநாயராக பதவி வகித்த அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து பதவி விலகினார். அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுள்ளார்.
எனவே, நாடாளுமன்றம் இன்று கூடியபோது புதிய சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
இதன்போதே ஆளுங்கட்சி சார்பில் ஜகத் விக்கிரமரத்னவின் பெயரை பிரதமர் முன்மொழிந்தார். சபை முதல்வர் அதனை வழிமொழிந்தார்.
எதிரணி தரப்பில் வேட்பாளர் எவரும் முன்மொழியப்படவில்லை. இதனையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளர் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.