கச்சத்தீவை மீள ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக கச்சத்தீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று தமிழகத்தை ஆளும் திமுகவின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர்,
“ கச்சத்தீவு சம்பந்தமாக இந்திய அரசாங்கம் எம்மிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை. எனவே, இந்தியாவிலுள்ள கட்சிகள் கூறும் விடயங்கள் முக்கியத்துவம் பெறாது. இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அது பற்றி பேச்சு நடத்தலாம்.” – என்றார்.