உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அனைத்து உள்ளாட்சிசபைகளுக்கும் நாம் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். மொட்டு சின்னத்தின்கீழ்தான் களம் காண்போம்.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்கோரும் திட்டத்துக்கு நாம் முழுமையாக ஆதரவு வழங்குவோம். கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம்.
அதேபோல மாகாணசபைத் தேர்தலிலும் மொட்டு சின்னத்தின்கீழ்தான் போட்டியிட உத்தேசித்துள்ளோம்.
கட்சியில் இருந்து நாம் எவரையும் வெளியேற்றவில்லை. வெளியேறியவர்கள் எம்முடன் இணைவது தொடர்பில் பேச்சு நடத்தலாம்.”- என்றார்.