கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எதிரொலி ஊடகக் குழுமம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன், இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை விரைவில் கைது செய்வதற்குரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றுவதற்குரிய சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் எதிரொலி வலியுறுத்துகின்றது.