உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்குரிய சட்டரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை உள்ளாட்சிசபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவதற்கும் அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின்னர் 2026 ஆம் ஆண்டு முதல் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது .