தாய்வான் சீனாவின் ஒரு மாநிலமென தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ஒரே சீனாக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசு “ஒரே சீனாக் கொள்கையை” தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்துள்ளது.
அதன்மூலம் சட்டரீதியான சீனாவாக மக்கள் சீனக் குடியரசை மாத்திரம் ஏற்றுக் கொள்வதுடன், தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக் கொள்வதெனும் நிலைப்பாடாகும்.
இலங்கை அரசு குறித்த கொள்கையை அவ்வகையிலேயே தொடர்ந்தும் கடைப்பிடித்து அதற்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேவேளை, சில மேற்குலக நாடுகள் தாய்வானை தனி நாடாக கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.