ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
முதலீடு, வலுசக்தி, மீன்பிடி, சுற்றுலா மற்றும் பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியதாகவே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமையும் என அறியமுடிகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கான சீனாவின் உதவி, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா வழங்கும் ஆதரவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின்போது கலந்துரையாடப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனவரி 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன சபாநாயகர் ஆகியோருடன் ஜனாதிபதி அநுர பேச்சு நடத்தவுள்ளார்.