கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பொலிஸாரினால் இன்று முற்பகல் 10 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
குறித்த மாணவி கருப்பு நிற வேனில் நேற்று முன்தினம் கடத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து வாகனம் பொலன்னறுவை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. சாரதியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், கடத்திய நபர் மாயமாகி இருந்தார். அவரை கண்டுபிடிப்பதற்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியும் மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த மாணவி கடத்தப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.