மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
காயமடைந்த நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் இருவர், உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.