வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், துறைமுக அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.