பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
" நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என நீதி அமைச்சர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தொடர்பில் கவலை அடைகின்றேன். ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியாகும். அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களுக்கு தெரியும். எனவே, அந்த தரப்பில் இருந்து அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறப்படுவதுதான் பெரும் கவலையாக உள்ளது." எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் உள்ளனர்.அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கலாம். தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதனை மீளப்பெறலாம். எது எப்படி இருந்தாலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதேபோல பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்." - எனவும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.