நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கான உணவு கட்டணமாக அறிவிடப்பட்டுவந்த 450 ரூபாவை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமையவே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீருக்காக நாளொன்றுக்கு 450 ரூபா அறிவிடப்பட்டுவந்தது.
புதிய ஏற்பாட்டுக்கு அமைய கால உணவுக்காக 600 ரூபாவும், பகல் உணவுக்காக 1,200 ரூபாவும், மாலை நேநீருக்காக 200 ரூபாவும் அறிவிடப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் புதிய விலை பட்டியல் அமுலுக்கு வரவுள்ளது.