இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் தலையில் நரம்பு வெடித்து இரத்தம் கசிந்துள்ளது என்றும், வைத்தியசாலையில் அவருக்குச் செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.