நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாமீது நேற்று விமர்சனக் கணைகளைத் தொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அர்ச்சுனாவை வைத்தியரொருவரிடம் அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தார்.
அநுராதபுரம் பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தியே அவர் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்திருந்தார்.
அர்ச்சுனா எம்.பி. இவ்விடயத்தை தமிழில் குறிப்பிட்டுக்கொண்டிருக்கையில்
கடிதத்தில் உள்ள விடயங்களைத்தான் குறிப்பிடுகின்றேன் என சுட்டிக்காட்டி, ஆங்கில மொழியில் அதனை வாசித்தார் அர்ச்சுனா எம்.பி. அத்துடன், நாடாளுமன்ற முகாமைத்துவம் மற்றும் சபாநாயகர்மீதும் விமர்சனங்களை முன்வைத்தார். தனக்கு உரையாற்ற வாய்ப்பளிக்காடாமை தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அப்பால் உள்ள விடயங்களை ஹென்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் கட்டளையிட்டார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
' இவரின் (அர்ச்சுனா) நடத்தை தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளன . புபுறத்தில் இவர் உங்களை நோக்கி (சபாநாயகரை) வெட்கம் எனக் குறிப்பிடுகின்றார். மறுபுறத்தில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான விடயம் என்றும் குறிப்பிடுகின்றார்.இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைப்பதில்லை.
இவ்வாறான கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் சபையில் இடமளிக்க வேண்டாம். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்." - என்று குறிப்பிட்டார்.