யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் அர்ச்சுனா எம்பி மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரும் நேற்று இரவு உணவருந்தச் சென்றுள்ளனர்.
அங்கு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இலங்கையர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அர்ச்சுனா எம்.பி. வீடியோ எடுத்துள்ளார்.
இதன்போது ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இலங்கையர், ' சட்டத்தரணி மற்றும் வைத்தியராக நீங்கள் இரு வரும் இருந்துகொண்டு அனு மதியின்றி பிறரை வீடியோ எடுக்க லாமா?" - எனக் கேட்ட நிலையில், அர்ச்சுனா எம்.பி. அங்கு நின்ற சாரதியை தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரது தொலைபேசி பறிக்கப்பட்ட நிலையில் அர்ச்சுனா எம்.பி. அந்தச் சாரதி மீது கிளாஸால் தாக்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காயப்பட்ட நபரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதேவேளை, தனக்கு உயிர் அச் சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அர்ச்சுனா எம்.பி. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன் றைப் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.