வடக்கு மாகாணத்தில் கிராமிய பாலங்கள் மற்றும் வீதி அபிவிருத்திக்காக 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு -செலவுத் திட்ட உரையின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
" யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தல் அண்மையில் பங்கேற்றிருந்தேன். இதன்போது இவ்வருடத்துக்குள் 5 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிட முடியும் என பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இதைவிடவும் கூடுதல் நிதி வழங்கவிருந்தோம். இத்தொகை போதுமெனக் கூறப்பட்டது.
எனவே, குறித்த நிதியை 8 மாத காலப்பகுதிக்குள் பயன்படுத்தி தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது." எனவும் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.