கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச்சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு வாகனமொன்றில் குறித்த நபர் தப்பிச்சென்றுகொண்டிருக்கையிலேயே புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த கூட்டு தேடுதல் நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான மொஹமட் அஸ்மான் செரீப்டீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் சிப்பாயென தெரியவந்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற சில படுகொலை சம்பவங்களில் இவர் பிரதான துப்பாக்கிசுடும் நபராக செயல்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சட்டத்தரணிபோல் வந்து இவருக்கு உதவிய யுவதியும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.