" போரை முடிப்பதற்காக அன்று ஜே.வி.பியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவை ஆதரித்திருக்காவிட்டால் இன்று தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்..." என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.
ஜே.வி.பியிலிருந்து வெளியேறி இருக்காவிட்டால் இன்று நீங்களும் உயர் பதவியில் இருந்திருக்கக்கூடும் அல்லவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விமல் வீரவன்ச கூறியவை வருமாறு,
" நான் அன்று அவ்வாறு வெளியேறி இருக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும். நாம் வாழும் (சிங்களவர்கள் வாழும்) தெற்காசியாவில் பாலஸ்தீனமாக மாறி இருக்கும். மறுபுறத்தில் தெற்காசியாவில் இஸ்ரேலாக தமிழ் ஈழம் மாறியிருக்கும்.
ராஜபக்சக்களை பலப்படுத்துவதற்காக அல்ல, புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே அன்று அந்த முடிவை எடுத்தேன்.
அன்று நாம் அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், இலங்கை என்ற நாடு இன்று மிஞ்சியுள்ளது. அவ்வாறு அல்லாவிட்டால் காசா பகுதிபோல்தான் ஒரு நாடு இருந்திருக்கும்.
ஜே.வி.பியில் இருந்தபோதும், வெளியேறியுள்ளபோதிலும் நாட்டுக்காக எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்." - என்றார்.