பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலம் கடத்தவில்லை எனவும், இது விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறப்போவதில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் மூலதர்மங்களுக்கு கட்டுப்பட்டதாகவே புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தேர்தலுக்கு முன்னரே தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. அதேபோல ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நாம் எதிர்;த்திருந்தோம்.
புதிய குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். பழைய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும், புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தொடர்பிலும் இந்த குழு மீளாய்வு செய்யும். அடுத்த தேர்தல்வரை காலத்தை இழுத்தடிப்பதற்கான மீளாய்வு அல்ல இது.” எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேஐள, பூகோல பயங்கரவாதம், பூகோல நூதன சவால்கள் என்பவற்றுக்கு முகங்கொடுக்ககூடிய வகையிலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.” என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.