செம்மணி, கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னார் ஆகிய மனிதப் புதைகுழிகளின் சாட்சியங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் போன்ற இடங்களிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளை ஆராய்ந்து கையாள்வதற்கான மரபு ஒழுங்குகள் சம் பந்தப்பட்ட துறைகளிடம் கிடையாது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் போன்ற இடங்களிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளின் சாட்சியங்கள் காலதாமதங்களினால் அழி க்கப்படலாம். எனவே சாட்சியங்கள் அழிக்கப்படாமலிருக்க அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மனிதப்புதைகுழிகளின் சாட்சியங்களைப் பாதுகாக்க போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டார்.