'பொறுப்புகூறல் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சர்வதேச ஈடுபாட்டுடன் உண்மையைக் கண்டறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்று முழுதாக நீக்குவோம் என வாக்குறுதியளித்த இந்த அரசு தற்போது அதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை இயற்றப்படும் என அறிவித்துள்ளது. " எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையை மறைத்து எங்கேயும், எப்போதும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இருப்பதாகக் கூறிக்கொண்டு அந்த வடக்கு, கிழக்கு மக்களின் முக்கிய கோரிக்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் அசமந்தமாக அரசாங்கம் செயல்படுகின்றது. அரசின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் அபிலாஷையை மூடி மறைப்பதாக உள்ளது." என சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.