பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1009 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டார்.
795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் போத்தல்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசபந்து தென்னகோனின் வீட்டை சிஐடியினர் நேற்று சோதனைக்கு உட்படுத்தியபோது இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.