வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது உறவினரான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பிலேயே அவர்களுக்கு இன்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவின் தம்பியே எஸ்.எம். ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.