" இறுதிக்கட்ட போரின்போது வடக்குக்கு வந்து பிரபாகரனை அழைத்துச்செல்வதற்கு பலம்பொருந்திய நாடுகள் முயற்சித்தன. இந்தியாவே அதனை தடுத்து நிறுத்தியது." என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
எனவே, இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாது இருந்திருந்தால் ஒருபோதும் போரை முடித்திருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
" இந்தியா தொடர்பில் சிலர் போலியான மாயையை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றனர்.
எமது நாட்டை இந்தியா ஒருபோதும் தாக்க முற்படாது. ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் கச்சத்தீவைக்கூட வழங்கியது.
அதேபோல இந்தியாவின் ஒத்துழைப்பு இருந்திருக்காவிட்டால் மஹிந்த ராஜபக்சவால் ஒருபோதும் போரை முடித்திருக்க முடியாது." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதிக்கட்டபோரின்போது பலம்பொருந்திய சில நாடுகள் பிரபாகரனை அழைத்துச்செல்ல முற்பட்டன. அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியது. அதனால்தான் 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.
எனவே, இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதில் எவ்வித தவறும் கிடையாது. அந்தவகையில் தற்போதைய அரசாங்கத்தின் நகர்வு சரியானது." - எனவும் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.