முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு உடனடியாக இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்தவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
" மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை விரைவில் அம்பலப்படுத்துவோம்.
எனவே, நாட்டின் தற்போதைய நிலைமையில் மஹிந்த ராஜபகச, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்." - என்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.