“ இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
“ புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது. புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது.
மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்றும் திருமாவளவன் கூறினார்.
போராட்டமொன்றின்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.