ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்தே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினவால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியொன்று கடந்த செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் மேற்படி துப்பாக்கியின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவென கூறப்படும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.