அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்." - எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.